ஆண் பெண் இயல்புகள் (தொல்காப்பியம்)
Appearance
அண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனி இயல்புகள் உண்டு. ஆளுமைத் தன்மை உடையவரை ஆண் என்னும் சொல்லாலும், பேணும் தன்மை உடையவர்களைப் பெண் என்னும் சொல்லாலும் தமழ் வழங்குகிறது.
தொல்காப்பியர் இந்த வேறுபாட்டை உணர்த்துகிறார்.
- ஆண் தன்மை [1]
- பெருமை - பலராலும் மதிக்கப்படும் பெருந்தன்மை
- உரன் - பெண்களைக் காட்டிலும் அதிக உடல் வலிமை
- பெண் தன்மை[2]
- அச்சம் (அஞ்சாமை ஆண்குணம். அஞ்சுவது பெண்ணியல்பு)
- நாண் (பிற ஆடவரைக் கண்டால் வெட்கப்படுதல்)
- மடம் (கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை)
- நிச்சம் (பயிர்ப்பு) (முன் பின் பயிற்சி இல்லாதவர்களிடம் தோன்றும் கூச்சம்)